மாநிலங்கள் தோறும் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நடத்தும் மக்கள் ஆசீர்வாத யாத்திரையானது கொரோனா மூன்றாவது அலைக்கு வரவேற்பு கொடுப்பதாக அமைந்து வருகிறது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவையில் புதிதாக 39 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஆசீர்வாத யாத்திரையை பாஜக நடத்தி வருகின்றது.
இதில் பெருந்திரளாக பாஜகவினர் கூறி வருகின்றனர். மேலும் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் பாஜகவை சேர்ந்த ஒருவர் கூட வர முடியவில்லை. அதிக மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதாக பாஜக பெருமை பேசி வருகிறது என்றும் சிவசேனா கூறியுள்ளது.