Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா உடனான 3-வது டெஸ்ட் போட்டி…. இங்கிலாந்து அணி அறிவிப்பு…..!!!!!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 25 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டோமினிக் சிப்லி, ஜாக் கிரௌலி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.  இங்கிலாந்து அணி (மூன்றாவது டெஸ்ட்): ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீது, டேனியல் லாரன்ஸ், ஷாகிப் மேக்மூத், டேவிட் மலான், க்ரேயக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், மார்க் உட்.

Categories

Tech |