இந்தியர்களை மீட்பதே நோக்கம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்..
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. சர்வதேச நாடுகள் அந்நாட்டில் சிக்கியிருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்டு வருகின்றனர்.. இந்திய அரசு தரப்பிலும் இரண்டு கட்டங்களாக 250 தூதரக அதிகாரிகள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.. மேலும் இந்தியர்கள் அங்கு சிக்கியிருக்கின்றனர்.. பிரதமர் மோடி தலைமையில் ஆப்கான் விவகாரம் தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டது..
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதே முதன்மை நோக்கம்.. ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்..