எட்டு வயதுடைய சிறுமியை மூன்று வருடமாக பாலியல் வன்புணர்தல் செய்த நபருக்கு 18 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கியூபெக் மாகாணத்தில் மாண்ட்ரீல் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் 60 வயதுடைய சில்வைன் வில்லேமெயர் என்ற நபர் வாழ்ந்து வந்துள்ளார். அந்த சில்வைன் வில்லேமெயர் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மனோதத்துவ ஆசிரியராக பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு யார் என்று அடையாளம் காண முடியாத ஒரு 8 வயதுடைய சிறுமியை வெளியீட்டு தடையின் காரணமாக ஐவரி கோஸ்டிலிருந்து மாண்ட்ரீலுக்கு அழைத்து வந்துள்ளார். பிறகு தோரயமாக ஒரு வாரத்திற்கு நான்கு முறை எனத் தொடர்ந்து மூன்று வருடமாக அச்சிறுமியை பாலியல் வன்புணர்வுதலுக்கு உட்படுத்தியுள்ளார். இந்த தகவலை அறிந்த போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு சில்வைன் வில்லேமெயர் மீது பாலியல் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சில்வைன் வில்லேமெயருக்கு 18 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவர் இணையம், ட்விட்டர் மற்றும் சமூக வலைதளம் உட்பட அனைத்தையும் பயன்படுத்துவதற்கு 25 ஆண்டுகள் தடை விதித்துள்ளார். இதனையடுத்து இவர் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் பொது இடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து சில்வைன் வில்லேமெயர் ஒரு கொடூரமான குற்றவாளி என்று முத்திரை பதிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.