Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை – சபாநாயகர் விளக்கம்..!!

அதிமுக உறுப்பினர்கள் நேற்று தாமாகவே சட்ட பேரவையிலிருந்து வெளியேறினர் என்று சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்..

தமிழக சட்ட பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான உரை தொடங்கிய போது,  நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தன்னையும், கழகப் பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.. இதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்ட சபையில் சட்டப்படியே விசாரணை நடைபெறும்.. யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.. முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் யார் என்று வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்..

அதிமுகவினர் கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. இந்த நிலையில் இன்றைய சட்ட பேரவை தொடங்கிய போது, சபாநாயகர் அப்பாவு அதிமுக உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை.. அவர்களாகவே அவையை விட்டு வெளியேறினர்.. மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய அவையில் தனிப்பட்ட பிரச்சினையை பேச நான் அனுமதித்தேன் என்று கூறியுள்ளார்..

Categories

Tech |