Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை…. ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.  அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி : ஆரோன் ஃபிஞ்ச் (கே), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் , ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்வெப்ஸன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

 

Categories

Tech |