Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5…. வெளியான போட்டியாளர்கள் லிஸ்ட்….!!!

பிக் பாஸ் சீசன் 5இல் பங்கேற்கும் போட்டியாளராகள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வந்தது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையில் பிக்பாஸ் 5ல் யார் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்க போகிறார்கள் என்ற சில தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, நடிகை சகிலாவின் மகள் மீலா, நடிகை ரம்யாகிருஷ்ணன், மைனா நந்தினி, ஜி.பி.முத்து, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். நியூஸ் ரீடர் கண்மணி, நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகர் ஜான் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |