திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்துள்ளவர்களின் கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. நகை கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணியில் வங்கிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. வங்கி அதிகாரிகள் நகை அடமானம் வைத்துள்ளவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரம் சேகரித்துள்ளனர். இந்த விவரங்கள் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விரைவில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.