உடன் இருந்தவரை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்க எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டம் நகரி பகுதியில் திருநங்கையான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து வெளியேறி ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் கும்பினிபேட்டை பகுதியிலுள்ள திருநங்கை மோனிஷா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் அண்ணன் ஜனா மற்றும் தாய் தேசம்மாள் ஆகியோர் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கும்பினிபேட்டை பகுதியில் உள்ள திருநங்கைகள் தனது தம்பியை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை அவர்களிடம் இருந்து மீட்டு தருமாறும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் அஜீத்தை அழைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது திருநங்கை மோனிஷா தரப்பினர் அஜித்தின் குடும்பத்தினர் தங்களை தாக்க வந்ததாகவும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறி புகார் அளித்துள்ளனர்.
அப்போது அஜித்திடம் விசாரணை நடத்தி கொண்டிருந்ததால் புகாரை வந்து பெற்றுக் கொள்வதாக காவல்துறையினர் திருநங்கை மோனிஷாவிடம் தெரிவித்துள்ளனர். உடனே மோனிஷா தலைமையிலான திருநங்கைகள் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள திருத்தணி சாலையில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி திடீரென நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள், அஜித்தின் அண்ணன் ஜனா மற்றும் தாயார் தேசம்மாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் திருநங்கைகள் அஜீத்தை அவரது குடும்பத்தினருடன் திருப்பி அனுப்ப மறுத்தனர். இதனால் ஜனா மற்றும் தேசம்மாள் ஆகியோர் காவல்துறையினரிடம் அஜித்தை அவர்களிடம் விட்டுச் செல்வதாக கூறி ஊருக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.