எள்ளு துவையல்
தேவையான பொருட்கள் :
கறுப்பு எள்ளு – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
புளி – நெல்லிக்காயளவு
பூண்டு பற்கள் – 2
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு , மிளகாய், பூண்டு, புளி , தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி எடுத்து ஆற விடவும். பின்னர் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுத்தால் சுவையான எள்ளு துவையல் தயார் !!!