பன்னீர் கிரேவி
தேவையான பொருட்கள் :
பன்னீர் – 300 கிராம்
சீரகம் – 1/4 ஸ்பூன்
பட்டை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
வறுத்த சீரகத்தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/4 ஸ்பூன்
முந்திரித்தூள் – 4 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – தேவைக்கேற்ப
கஸ்தூரி மேத்தி – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் ,ஏலக்காய் ,பட்டை , கிராம்பு , வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும் . பின் இதனுடன் காஸ்மீரி மிளகாய் தூள் , மிளகாய்த்தூள் , சீரகத்தூள் , தனியா தூள் , அரைத்த தக்காளி விழுது , மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும் . பின் கரம் மசாலாத்தூள் , வறுத்து அரைத்த முந்திரி தூள் , பன்னீர் , தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கஸ்தூரி மேத்தி சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான பன்னீர் கிரேவி தயார் !!!