இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த 15ம் தேதியுடன் முடிந்தது. ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை.
இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.