Categories
உலக செய்திகள்

அதிபர் தப்பியோட்டம்…. ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம்…. இணையத்தில் வெளியிட்ட வீடியோ….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடியது குறித்து இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆவார். இவர் தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி தலைநகரான காபூலில் நுழைந்தவுடன் தனது குடும்பத்துடன் அந்நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிபர் அஷ்ரப் கனி அவரது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மேலும் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு தப்பி சென்றது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலைகளில் அதிபர் அஷ்ரப் கனி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றி தலைநகர் காபூலுக்கு வந்ததும் என்னை உள்ளூர் மொழி பேசத் தெரியாதவர்கள் சிலர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து தேடினார்கள். அப்போது நான் எனது காலணிகளை கூட அணிய முடியாத இக்கட்டான சூழ்நிலையில் வெளியேற்றப்பட்டேன். இந்த சம்பவம் மிகவும் விரைவாக நடைபெற்று விட்டது. மேலும் நான் தலீபான் தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினேன். இதனையடுத்து நான் அரசின் முன்னாள் அதிகாரிகளுக்கும் தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிக்கிறேன். மேலும் நான் திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்கு வருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |