Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தொழிலாளி… கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள கைலாசபட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவர் வடுகபட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு கோவில் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த தென்கரையை சேர்ந்த முத்தையா என்ற இளைஞர் திடீரென பாலமுருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் கத்தி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சென்று முத்தையாவை மடக்கி பிடித்துள்ளனர். மேலும் அந்த இளைஞரை தென்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து முத்தையாவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |