பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆவணி முகூர்த்தம், வரலட்சுமி நோம்பு காரணமாக ஆத்தூர் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதனால் குண்டு மல்லிகை கிலோ 2000 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 600, ஒரு முழம் மல்லிகைப்பூ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தலை நிறைய மல்லிகைப் பூ வைக்கும் பெண்கள் இன்று வைக்க முடியவில்லை என கவலை அடைந்துள்ளனர். இது பெண்களுக்கு கவலை தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories