Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சம்பத் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், மருத்துவ காப்பீடு திட்டத்தை வாரியமே நடத்த வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |