தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் இன்று ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்தும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகலாம்.