சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. மரவள்ளி கிழங்கு பயிருக்கு முக்கிய எதிரி மாவுப்பூச்சி ஆகும். இந்த மாவுப் பூச்சியின் தாக்குதலால் மரவள்ளி கிழங்கு பயிர் விளைச்சல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி அதனுடைய உற்பத்தி குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இதனால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 2000 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாமக்கல், சேலம். கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.