மொறுமொறு துக்கடா
தேவையான பொருட்கள் :
மைதா – 1 கப்
பூண்டு – 5 பற்கள்
வரமிளகாய் – 4
வெண்ணெய் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – சிறிது
செய்முறை :
முதலில் பூண்டு, வரமிளகாய் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் மைதா , நறுக்கிய கறிவேப்பிலை , பூண்டு விழுது , வெண்ணெய் , தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும் . 20 நிமிடங்கள் கழித்து சப்பாத்திகளாக தேய்த்து டைமண்ட் வடிவ துண்டுகளாக வெட்டி சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான மொறுமொறு துக்கடா தயார் !!!
குறிப்பு : கோதுமை மாவிலும் செய்யலாம் .