Categories
உலக செய்திகள்

முடிவடைந்த ஆப்கான் போர்…. புதிய ஆட்சியை அமைக்கும் பணிகள் துவக்கம்….!!

ஆப்கானில் தலிபான்களின் தலைமையிலான அரசை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர்.மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரான காபூலையும் கைப்பற்றினர். இதனிடையே ஆப்கானை தலிபான்கள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

இதனிடையே கடந்த திங்கட்கிழமை அதிபர் மாளிகையை தங்களது கைக்குள் கொண்டு வந்த தலிபான்கள் போர் முடிவு பெற்றதாக அறிவித்தனர். இதனிடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தலிபான்கள் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு கல்வி உரிமைகள், வெளியே செல்லும் உரிமைகள் மறுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போதைய தலிபான்கள் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்ட பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு புதிய அரசிலும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானில் புதிய அரசை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகின்றது.  இதனிடையே கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து பல்வேறு தலிபான் அரசியல் தலைவர்கள் தலைநகர் காபூலில் வந்தடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தாலிபன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான முல்லா அப்துல் காதர் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Categories

Tech |