Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 20…!!

ஆகத்து 20  கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான்.

636 – அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம் இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு வெளியே முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது.

917 – பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார்.

1000 – அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது.

1083 – அங்கேரியின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

1191 – மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான சலாகுத்தீனின் முசுலிம் இராணுவத்தினர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1852 – அத்திலாந்திக்கு என்ற அமெரிக்க நீராவிக் கப்பல் மூழ்கியதில் 150 பேர் உயிரிழந்தனர்.

1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கையை இயற்கைத் தேர்வு மூலம் முதலில் வெளியிட்டார், இதே கொள்கை அதே நாளில் ஆல்பிரடு அரசல் வாலேசினாலும் வெளியிடப்பட்டது.

1866 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1910 – அமெரிக்காவின் வடகிழக்கு வாசிங்டன், வடக்கு ஐடகோ, மேற்கு மொன்ட்டானா ஆகிய இடங்களில் பெரும் தீ பரவியது.

1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை செருமனி கைப்பற்றியது.

1917 – இலங்கையில் ஒரு ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் லியோன் திரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் இறந்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் 168 போர்க் கைதிகள் செருமனியின் புக்கென்வால்ட் வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.

1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

1950 – கொரியப் போர்: வடகொரியப் படைகள் நாக்டொங் ஆற்றைக் கடந்து தேகு நகரைத் தாக்க எடுத்த முயற்சிகளை ஐநா படைகள் முறியடித்தன.

1955 – மொரோக்கோவில், அட்லசு மலைப் பகுதியைச் சேர்ந்த பேர்பர் படைகள் இரண்டு குடியேற்றங்களைத் தாக்கி 77 பிரெஞ்சுக்காரரைக் கொலை செய்தனர்.

1960 – செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

1968 – பனிப்போர்: சோவியத்-ஆதரவு வார்சா உடன்பாட்டுப் படையினர் 200,000 பேர் செக்கோசிலோவாக்கியாவை ஊடுருவியது. இத்தாக்குதலில் அல்பேனியா, உருமேனியா ஆகியன பங்குபற்ற மறுத்து விட்டன.

1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

1977 – நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.

1988 – வட அயர்லாந்தில் பிரித்தானியப் படையினர் சென்ற பேருந்து ஒன்றில் ஐஆர்ஏ போராளிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், மேலும் 28 பேர் காயமடைந்தனர்.

1989 – தேம்சு ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் 51 பேர் உயிரிழந்தனர்.

1991 – மாஸ்கோவில் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1991 – எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.

1995 – இந்தியா, பிரோசாபாத் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர்.

1997 – அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1998 – கியூபெக் மாநிலம் மத்திய அரசின் அனுமதியின்றி கனடாவில் இருந்து சட்டபூர்வமாகப் பிரிய முடியாது என கனடாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2006 – ஈழப்போர்: அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணாமல் போனார்கள்.

2006 – ஈழப்போர்: நமது ஈழநாடு பத்திரிகையின் பணிப்பாளரும், முன்னாள் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. சிவமகராஜா தெல்லிப்பழையில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008 – எசுப்பானியா, மத்ரித் நகரில் பராகாசு விமான நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 172 பேரில் 146 பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

2014 – சப்பானில் இரோசிமா நகரில் நிகழ்ந்த நிலச்சரிவுகளில் 72 பேர் உயிரிழந்தனர்.

2016 – துருக்கியின் காசியான்டெப் நகரில் குர்தியத் திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்,

இன்றைய தின பிறப்புகள்

1685 – பரூக்சியார், முகலாயப் பேரரசர் (இ. 1719)

1719 – கிறித்தியன் மேயர், செக் நாட்டு வானியலாளர் (இ. 1783)

1890 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1937)

1910 – ஈரோ சாரினென், கேட்வே ஆர்ச்சை வடிவமைத்த பின்லாந்து-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1961)

1913 – ரோஜர் ஸ்பெர்ரி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1994)

1933 – செ. மாதவன், தமிழக அரசியல்வாதி (இ. 2018)

1944 – ராஜீவ் காந்தி, இந்தியாவின் 6வது பிரதமர் (இ. 1991)

1946 – நா. ரா. நாராயணமூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்

1951 – முகம்மது முர்சி, எகிப்தின் 5வது அரசுத்தலைவர்

1974 – ஏமி ஆடம்சு, அமெரிக்க நடிகை

1981 – பென் பார்னெஸ், ஆங்கிலேய நடிகர்

1983 – ஆண்ட்ரூ கார்பீல்ட், அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்

1984 – மதுமிதா, இந்திய நடிகை

1992 – டெமி லோவாடோ, அமெரிக்கப் பாடகி, நடிகை

இன்றைய தின இறப்புகள்

984 – பதினான்காம் யோவான் (திருத்தந்தை)

1572 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. 1502)

1854 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய மெய்யியலாளர் (பி. 1775)

1912 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (பி. 1829)

1914 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1835)

1915 – கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர், ஆய்வாளர் (பி. 1833)

1939 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1845)

2001 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1915)

2001 – எஸ். கே. பாலகிருஷ்ணன், தமிழக அரசியல்வாதி (பி. 1935)

2006 – சி. சிவமகராஜா, இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1938]])

2011 – ராம் சரண் சர்மா, இந்திய வரலாற்றாளர் (பி. 1919)

2013 – நரேந்திர தபோல்கர், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1945)

2014 – பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)

2014 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர், ஊடகவியலாளர் (பி. 1983)

2017 – ஜெர்ரி லுவிஸ், அமெரிக்க நடிகர் (பி. 1926)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (எசுத்தோனியா, சோவியத்திடம் இருந்து 1991)

உலகக் கொசு நாள்

மத நல்லிணக்க தினம் (இந்தியா)

Categories

Tech |