சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சாஸ்திரி நகர் பகுதியில் வசிக்கும் ரதீஷ்குமார் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக 1700 புகையிலை பொருட்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ரதீஷ்குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் ரதீஷ்குமார் வெளிமாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கூரியரில் அனுப்ப சொல்லி அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.