Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் வெளியே சென்ற தந்தை…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தஞ்சாவூரில் சோகம்….!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் தனது மகன் ஹரிஹரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அஜித் குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஆனது ஹரிஹரனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த அஜித்குமார் மற்றும் ஹரிஹரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |