Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டிப்பு…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பீர் முகமது என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவரது மகள் ராபியா புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இதனையடுத்து ராபியாவை அவரது பெற்றோர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாததால் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ராபியா தனது அத்தை வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனையடுத்து ராபியாயின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய நிலையில் இருந்த அவரை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராபியா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |