நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது பாக்ஸர், சினம், அக்னி சிறகுகள், பார்டர் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர இவரது 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, கே.ஜி.எப் கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அருண் விஜய்யின் வலது கையில் சிறிது காயம் ஏற்பட்டது.
No excuse!! Back in action…💪🏽 Getting back from the island completing a major sequence with #kgfRam today!! Enjoyed and loved the work..❤ #AV33 #DirectorHARI #rameshwaram @DrumsticksProd @0014arun pic.twitter.com/magzqToUIg
— ArunVijay (@arunvijayno1) August 18, 2021
இதையடுத்து அவர் காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் அதிரடி சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியதாக அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ‘கே.ஜி.எப் ராமுடன் ஒரு பெரிய சண்டைக்காட்சியை முடித்துவிட்டு தீவிலிருந்து திரும்புகிறோம்’ என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இயக்குனர் ஹரி மற்றும் படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.