சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் சப் – இன்ஸ்பெக்டரான புவனேஸ்வரி முன்னிலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது 30 மதுபாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போது அதே கிராமத்தில் வசிக்கும் முத்துக் கருப்பசாமி மற்றும் மாரியப்பனை என்ற 2 வாலிபர்கள் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் அவர்களிடமிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.