மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் யூத்ரா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
FARHAN AKHTAR – RITESH SIDHWANI START NEW FILM… Producers #RiteshSidhwani and #FarhanAkhtar commenced shoot of action-thriller #Yudhra today… Stars #SiddhantChaturvedi and #MalavikaMohanan… #RaviUdyawar – who directed #Mom [#Sridevi] – directs. pic.twitter.com/FBLlxqzlgL
— taran adarsh (@taran_adarsh) August 19, 2021
அடுத்ததாக இவர் பாலிவுட்டில் ரவி உடையவர் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘யுத்ரா’ படத்தில் நடிக்க இருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சித்தான்ட் சதுர்வேடி கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் யுத்ரா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.