தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள எளூர் பனங்காடு பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு மணியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் சில நாட்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகததல் மனமுடைந்த மணியம்மாள் கடந்த 11ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மணியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக சேந்தமங்கலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் மணியம்மாளுக்கு உடல் நலம் பாதிப்படைந்துள்ளது. இதனால் அவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மணியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.