Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பினால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பயிர் காப்பீடு திட்டம் சார்பில் சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சம்பா நெல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு கட்டண மானியமாக ரூ.1,248.92 கோடியை தமிழ்நாடு அரசு தற்போது விடுவித்துள்ளது. மேலும், நெல் மற்றும் தட்டைப்பயிறு நீங்கலாக அறிக்கை வெளியிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காப்பீடு செய்யப்படும். சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தில் அறிக்கை வெளியிடப்படும் பயிர்கள் அனைத்தும் காப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |