Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “கடன் பிரச்சினைகள் தீரும்”… தொழில் போட்டி நீங்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாளாக இருக்கும். கூட பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி செல்லும். பணவரவு தாராளமாக இருக்கும். பிறரிடம் நீங்கள் ஒப்படைத்த பொறுப்புகள் சிறப்பாக நடைபெற்று உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் ஏற்படும். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாகவே கொஞ்சம் இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும்  நீங்கும்.

அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது. எது செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் யோசனை செய்து செய்யுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைய கூடும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது அல்லது முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிற கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்டமான  எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |