விஜய் சேதுபதி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவாக்காற்று (2010), பீட்ஸா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்(2012), நானும் ரவுடி தான்(2015), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார்.
இந்நிலையில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கும் ககாத்துவாக்குல 2 காதல் என்ற படத்திற்கு 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது கடைசி கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. அப்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவருடைய இல்லத்தில் நடிகர் விஜய்சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.