தமிழகத்தில் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்து அதற்கான பணி நியமன ஆணையும் வழங்கினார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்திற்கு திமுகவிற்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகையுமான விந்தியா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். அது சமூக நீதி. ஆனால் என்னுடைய குடும்பம் மட்டும் தான் திமுக தலைவர் ஆகலாம். இது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீதி. உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம். அதே மக்களாகிய எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று வடிவேலுவின் டயலாக்கை சொல்லி கடுமையாக பதிவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.