Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “திருமண தடைகள் அகலும்”… திடீர் பண வரவு உண்டாகும்.!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். திருமண தடைகள் அகலும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க நேரிடும். சாதுர்யமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும். திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும்  பார்த்துக்கொள்ளுங்கள்.

தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப் பெறுவார்கள். இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |