கன்னி ராசி அன்பர்களே…!! இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று குடும்பத்தில் திருமண சுப பலன்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்களுடன் கவனமாக பேசுவது நல்லது.
மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் தாமதமாக தான் நடக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, வெளியில் செல்லும்பொழுது பச்சைநிற ஆடை அல்லது பச்சை நிற கைக்குட்டை எடுத்துச் சொல்லுங்கள். அனைத்துக்கும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்