மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-20). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 27 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 102.49க்கும், டீசல் விலை மாறாமலும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்த நிலையில் பெட்ரோல் விலை ரூ.3 குறைந்து ரூ.99.47க்கும், டீசல் 94.39க்கும் விற்பனையானது. ஆனால் நேற்று டீசல் 18 காசுகள் குறைந்து ரூ.94.02க்கு விற்பனையானதைத்தொடர்ந்து இன்று மேலும் 18 காசுகள் குறைந்து ரூ.93.84க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.