விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று வருமானம் திருப்தி தரும் நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். அஸ்திவாரத்தில் நின்ற பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். கூடுதலாகவே இன்று நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும். வேலை தொடர்பான வீண் அலைச்சல் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களை தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள். பேசும் போது அவர்களிடம் கடுமையான வார்த்தைகளை ஏதும் கொட்டாதீர்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் இன்று சிறப்பான நாளாக இருக்கும். அம்மனை மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்