Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?…. இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை…..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கல்லூரிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு குறித்தும், கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.இந்தநிலையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா கூடுதல் தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனைக்கு பிறகு இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |