UIDAI ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 இலக்கங்களைக் கொண்டுள்ள அனைத்து எண்களும் அசல் ஆதார் எண்கள் அல்ல என UIDAI எச்சரித்துள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பணிகளுக்கும் ஒரு இன்றியமையாத ஆவணமாகிவிட்டது. கடந்த சில நாட்களாக ஆதார் அட்டையை நகலெடுப்பது, ஆதார் முறைகேடுகள் ஆகிய செயல்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பொது மக்களுக்கு UIDAI எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்கும் முன் அட்டை வைத்திருப்பவரின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. ஒரு நபரின் ஆதார் எண் சரியான எண்ணா இல்லையா என்பதை UIDAI இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்று UIDAI கூறியுள்ளது. இது தவிர, mAadhaar செயலியின் மூலமும் இதை தெரிந்து கொள்ளலாம்.
எப்படி சரிபார்ப்பது?
ஆதார் அட்டையை ஆன்லைனிலும் ஆப்லைனிலும் வெரிஃபை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை செய்ய பயனர்கள், resident.uidai.gov.in/verify என்ற இணைப்பிற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை இங்கே உள்ளிட வேண்டும். பிறகு பாதுகாப்பு குறியீடு மற்றும் கேப்ட்சாவை நிரப்பி, ‘Proceed To Verify’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு, 12 இலக்க எண்ணின் சரிபார்ப்பு (Number Verification) திரையில் காட்டப்படும். இதுதான் உங்கள் அசல் ஆதார் எண்.