Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில்…. தாக்குதலுக்கு ஆளாகும் மக்கள்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சிகள்….!!

காபூல் விமான நிலையத்தில் பொதுமக்கள் விரட்டி அடிக்கப்படும் காட்சிகள் வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழுஅதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் நாடு முழுவது பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதிலும் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு தப்பித்துச் சென்று அகதிகளாக வாழ்கின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதுவரை காபூல் விமான நிலையத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காபூலில் உள்ள Hamid Karzai  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆப்கானை விட்டு வெளியேற காத்து கிடக்கின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மேலும் சட்டபூர்வமாக உரிமை இல்லாதவர்களை திரும்பி வீட்டிற்கே தலீபான்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்றுவதற்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இதனையடுத்து விமான நிலையத்திலுள்ள நுழைவாயிலின் அருகே கூடிய மக்களை ராணுவ உடையணிந்து கையில் துப்பாகியுடன் நின்றவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற பாகுபாடின்றி  அனைவரையும் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர். மேலும் மற்றொரு நுழைவுவாயிலில் நின்ற மக்களை தலீபான்கள் குச்சியால் விரட்டியடித்துள்ளனர். குறிப்பாக ராணுவ உடை அணிந்த வீரர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த காட்சிகளானது வலைதளங்களில் பரவி அனைவரிடமும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

Categories

Tech |