Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “திருமண முயற்சிகள் கைகூடும்”… அக்கம் பக்கத்தில் பேசும்போது கவனம்..!!

மீனம் ராசி அன்பர்களே…!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளியை சந்திக்கக்கூடும். வருமானம் போதுமானதாக இருக்கும். எதையுமே சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். இன்று மனை, வீடு வாங்குவதற்கு எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாகவே நடக்கும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை  கொடுக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைப்பட்ட பணவரவு தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்துவந்த பிரச்சனைகளும் சரியாகும்.

இன்று ஓரளவு வெற்றி வாய்ப்புகளை நீங்கள் குவிப்பீர்கள். இருந்தாலும் பேசும்பொழுது மனதை நீங்கள் அமைதியாக வைத்திருந்தால் போதும். கோபம் தலை தூக்காமல் இருக்கும். இன்றைய  நாள்  அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடையை அணிந்து செல்லுங்கள். அனைத்து விதமான வெற்றியும் கிடைக்கும். இல்லையேல் வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே அமையும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |