Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இன்று முதல் ஆகஸ்ட் 23 வரை பக்தர்களுக்கு தடை…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |