தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் முதல், இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் நலன் கருதி கல்லூரிகளை மூடவும் பள்ளிகளை திறக்க கூடாது என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.