Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஆப்கான் விவகாரம் : அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை..!!

ஆப்கான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆண்டனி பிளிங்கின்  உடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துகிறார்..

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்கள் பயந்து போய் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர்.. சர்வதேச நாடுகள் தங்கள் மக்களை அங்கிருந்து மீட்டு வருகின்றனர்.. இந்தியா இரண்டு முறையாக 250 இந்திய தூதரக அதிகாரிகளை விமானம் மூலம் மீட்டு கொண்டு வந்துள்ளனது.. அதே சமயம் அமெரிக்கா காபூலில் இருந்து 350 அமெரிக்கர் உட்பட மேலும் 3 ஆயிரம் பேரை 16 ராணுவ விமானங்கள் மூலம்  மீட்டுள்ளது..

இந்த நிலையில் ஆப்கான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆண்டனி பிளிங்கின்  உடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துகிறார்.. இந்த விவகாரம் தொடர்பாக ஒரே வாரத்தில் இரண்டாம் முறையாக ஆண்டனி பிளிங்கின்,  ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துகின்றனர்.

தலிபான் அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தலிபான்களின் செயல்பாடுகளை பொறுத்து முடிவு எடுப்போம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |