Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

மைனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்…. இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நந்தினி….!!

நடிகை நந்தினி தனது கணவர் அவரது புகைப்படத்தை நெஞ்சில் பச்சைக் குத்தியுள்ளதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. இவர் வெள்ளித்திரையில் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் Mr & Mrs  என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம், தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெறும் கணவர்கள் தங்களது மனைவிக்கு பரிசு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அதில் தனது மனைவி நந்தினிக்கு யோகேஷ் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரது உருவத்தை நெஞ்சினில் பச்சைக் குத்தியுள்ளார். இதனை கண்ட நந்தினி இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அதனை நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |