நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் தர்மம் கேட்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில், தர்மம் கேட்பவர்களுக்கும், தெரு வியாபாரிகளுக்கும், அதிரடியாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. லாகோஸ் மாகாண அரசு, இவர்களை தொந்தரவாக கருதுகிறது. எனவே மாகாணத்தில், இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, தர்மம் கேட்பவர்களை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் இந்த குழு இயங்கத்தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில், இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாடு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, சட்டத்திற்கு இணங்கி வாழும் மக்களுக்கு தெருவில் தர்மம் கேட்பவர்கள் தொந்தரவாக இருக்கிறார்கள்.
மேலும் குழந்தைகளை வைத்துக்கொண்டு தர்மம் கேட்பவர்களும், வியாபாரிகளும் வேறு பகுதியில் இருந்து இந்த மாகாணத்திற்கு வரவரவழைக்கப்படுகிறார்கள். இது ஒரு வியாபாரமாக நடைபெற்று வருகிறது. மனித குலத்தையே இழிவுபடுத்தும் செயலாக உள்ளது. குழந்தைகளை கட்டாயப்படுத்தி இதில் ஈடுபடுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “எங்களின் தெருக்களில் இது போன்ற நபர்களின் செயல்பாடுகள் மக்களின் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்திற்கும் தொந்தரவாக இருக்கிறது. சுற்றுச்சூழல் தொல்லைகளையும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் உண்டாக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.