அஜித் , விஜய் போல மாஸ் ஹீரோ_வாக மாற போகின்றேன் என்று தங்களுடைய சினிமா வாழ்க்கையையே தொலைத்துக் கொண்ட பிரபலங்கள் .
தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்கள் தங்களுடைய கேரியரை ஆரம்பிச்சி நல்ல நல்ல படங்கள் ஆரம்பிச்சுருப்பாங்க நடுவுலே திடீர்னு புத்தி மாறி நானும் மாஸ் ஹீரோவாக மாறப்போறேனு சொல்லி தேவையில்லாத கண்ட , கண்ட படங்களை நடித்து தன்னுடைய முழு சினிமா கேரியரையும் ஸ்பாய்ல் பண்ணி இருப்பாங்க பண்ணியிருப்பாங்க. அத பற்றி தான் நாம இப்போ பாக்க போறோம்.இந்த லிஸ்டில் முதல் இடத்துல இருக்குறது .
டாப் ஸ்டார் பிரசாந்த் :
நடிகர்கள் விஜய் , அஜித் ஹீரோவா வரதுக்கு முன்னாடியே இவர் நடித்து வருகின்றார் . விஜய் , அஜித் ஹீரோவா படங்களில் அவர்களை ஹீரோன்னு மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு பல வருஷமாச்சு. ஆனால் பிரசாத்துக்கு அந்த பிரச்சினையே இல்லை. அவரது முதல் படமான வைகாசி பொறந்தாச்சுலயே மக்கள் அவரை ஹீரோ என்று ஏத்துக்கிட்டாங்க. அடுத்தடுத்து வந்த திரைப்படங்கள் உதாரணமா செம்பருத்தி போன்ற படங்கள் இவரை ஒரு ஹீரோவா ஏத்துக்கிட்டாங்க.
விஜய் , அஜித் எல்லாம் ஹிந்தியில நடிக்கிறதுக்கு பல வருஷமாச்சு. ஆனால் இவருக்கு அந்த மாதிரி கஷ்டப்படமே இல்லை. 1990_ல் ஆரம்பிச்ச இவரோட ஹீரோ ஹேரியர் 92 லையே மலையாளம் , தெலுங்கு சினிமாவில் பிஸியாகக்கியது. ஒரு சிறந்த நடிகராக அங்கேயும் மக்கள் இவரை ஏத்துக்கிட்டாங்க. முக்கியமா இவர் வந்த புதுசுல இவருக்கு பெண்கள் ரசிகர்கள் ரொம்ப அதிகமாக இருந்தது. மீசை இருந்தால்தான் ஹீரோ அழகா இருப்பாங்க என்று இல்லமால் மீசை இல்லாத ஒரு ஆண் அழகான ஹீரோவாக வலம் இவர் வந்தார்.
இவருடைய ஸ்டைல அப்போ பல இளைஞர்கள் மீசை எடுத்திட்டிருந்தாங்க, முக்கியமாக கிராமப்புறத்தில் இவருக்கு ரசிகர்கள் ரொம்பவே அதிகமாக இருந்தார்கள் . மேலும் 1990 களில் மிக அழகான இளமையான கதாநாயகன் பிரசாந்த் மட்டும் தான் என்ற மிகப் பெரிய உச்சத்தை தொட்டது. அதற்கு உதாரணமாக இவருடைய ஆணழகன் திரைப்படம். பிரசாந்த் நடித்த எந்த படமும் கண்டிப்பா மிகப் பெரிய ஹிட்டாகும். 100 நாட்களை தாண்டி ஓடும் அப்படிங்கிற ஒரு நிலை வந்தது. பிரசாந்த் 1995_களில் ஒரு கெஸ்ட் ரோல்பண்ணினாள் கூட அந்த படம் ஹிட் என்கிற மாதிரி நிலை உருவாக்கியது. அதற்கு உதாரணம் தான் அஜித் நடித்த கல்லூரி வாசல் படத்தில் பிரசாந்த் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் பண்ணியிருப்பாங்க.
இவர் அடுத்தடுத்து நடித்த ஜீன்ஸ் , ஜோடி , பார்த்தேன் ரசித்தேன் என எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. 2003_க்குள் தமிழ் சினிமாவில் இவர் கொடிகட்டிப் பறந்தார். ஹீரோவான அஜித் , விஜய் மாஸ் ஹீரோவாக மாறியது போல நானும் மாஸ் ஹீரோவாக மாற வேண்டுமென்ற முடிவெடுத்த பிரசாந்த் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு போட்டி போட வேண்டிய பிரசாந்த் மாஸ் படங்களில் நடிக்கிறேன் என்று சொல்லி மம்முட்டியான் , பொன்னர் சங்கர் , சாகசம் , ஜானி தேவையில்லாத படங்களில் நடித்து தன்னுடைய சினிமா கேரியரையே ஸ்பாய்ல் பண்ணிட்டாங்க. இவருக்கு அப்புறம் வந்த விஜயும் , அஜித்தும் தொடர்ந்து படங்களை கொடுத்து வருகின்றனர் . இவரு நடித்த 50_ஆவது படத்தில் சிறிய அண்ணன் கேரக்டர் பண்ணி இருப்பாங்க. இவ்வளவு பெரிய ஒரு நடிகர் மிகச்சிறந்த நடிகர் ஏன் இந்த மாதிரியான சின்ன கேரக்டரில் நடித்தார் என்று ரொம்ப வருத்தமாக இருந்தது.
நடிகர் ஜீவா :
இந்த லிஸ்டில் அடுத்ததாக வருவது நடிகர் ஜீவா. 2003_ஆம் ஆசை ஆசையாய் படத்துல ரொம்ப அமைதியா வந்தவரு , 2005 இல் ராம் படத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தாரு. அதுக்கப்புறம் நடித்த டிஷ்யூம் , சிவா மனசுல சக்தி சக்தி மாதிரியான திரைப்படங்கள் ஒரு கலக்கு கலக்கின. முக்கியமாக ”கற்றது தமிழ்” படத்தில் இவருடைய நடிப்பு மிக பிரமாண்டமாக பேசப்பட்டது. அதே மாதிரி இப்படத்தில் நடிக்க ஜீவா விட்டா வேறு யாரும் நடிக்க முடியாது என்கிற பெயரை எடுத்து வைத்திருந்தார்.
தமிழ் சினிமாவுக்கு ஒரு புது கதாநாயகன் , முக்கியமாக ஒரு புதிய நடிகன் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தது. ஆனால் இந்த மாதிரி நல்ல நல்ல படங்களில் நடித்தவர் திடீரென ஆக்க்ஷன் ஹீரோவாக மாற முடிவு எடுத்து தெனாவட்டு படத்தில் நடித்தார். அதுக்கப்புறம் கச்சேரி ஆரம்பம் , வந்தான் வென்றான் , முகமூடி போன்ற தேவையில்லாத படங்களில் நடித்து இருந்தாரு . ஒரு நல்ல நடிகர் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு மிகச்சிறந்த நடிகர் தேவையில்லாத படங்களில் நடித்து தங்களுடைய கேரியரை அவரே முடித்து கொண்டது ரொம்ப வருத்தமா இருக்கு.
நடிகர் ஸ்ரீகாந்த் :
அடுத்து நடிகர் ஸ்ரீகாந்த். 2002ல ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமான இவர் கூட பூமிகா , ராதிகா , ரகுவரன் என்று ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும். இந்த பட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதுக்கப்புறம் இவர் நடித்த ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் , பார்த்திபன் கனவு அப்படின்னு நல்ல நல்ல ஃபேமிலி படங்கள் நடித்திருந்தார்.
அவர் நடித்த படங்கள் எல்லாமே நூறு நாளுக்கு மேல ஒரு வெற்றி பாடமாக மாறியது. பின்னர் மாஸ் ஹீரோவா மாற போகின்றேன் என்று போஸ் , பம்பரக்கண்ணாலே என்று தேவையில்லாத படங்களில் நடித்து தன்னுடைய சினிமா கேரியர்ஸ் ஸ்பாய்ல் பண்ணிக்கிட்டாரு
நடிகர் பரத் :
அடுத்ததாக இந்த இடத்தில் இருக்குறது நடிகர் பரத். பாய்ஸ் , ஸ்டூடண்ட் , செல்லமே மாதிரியான படங்கள்ல இரண்டு மற்றும் மூன்றாவது ஹீரோ_வா நடித்தாலும் காதல் அப்படிங்கிற ஒரு நல்ல படத்தில் நடித்து தான் தான் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்று நிரூபித்தார். அடுத்ததாகா இவர் நடித்த எம்- மகன் , வெயில் மாதிரியான குடும்ப படம் இவரின் நடிப்பை சரசரவென்று உயர்த்தியது.
இவருக்கும் தீடிரென என்னாச்சுனு தெரியல நானும் மாஸ் ஹீரோவாக அப்படின்னு சொல்லி தேவையில்லாம நேபாளி , ஆறுமுகம் , திருத்தணி என்று மக்களை கொன்ற எல்லா படங்களிலும் நடித்து தன்னுடைய சினிமா கேரியரை தொலைத்துக் கொண்டார்.
நடிகர் ஜெய் :
இந்த வரிசையில் அடுத்த இடம் பிடித்துள்ளது நடிகர் ஜெய். நடிகர் விஜயுடன் பகவதி படத்தில் அறிமுகமாகி சென்னை-28 என்று நல்ல படங்களை கொடுத்த இவர் ஜெய் சுப்பிரமணியபுரம் படத்தில் தான் ஒரு நல்ல நடிகர் என்ற பெயரை தனதாக்கினார். நடிகர் சசிகுமார் கூட சொன்னாங்க நான் நல்லா வருவான் என்று எதிர்பார்த்த ஒரு நடிகர் ஜெய்யும் ஒன்று என்று சசிகுமார் தெரிவித்திருந்தார்.
நிச்சயமா சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த ஜெய் அதுக்கேத்த மாதிரி எங்கேயும் எப்போதும் போன்ற நல்ல படங்களில் நடித்து இருந்தாங்க. ஆனா நானும் ஒரு மாஸ் ஹீரோவை அப்படின்னு சொல்லி வடகறி , வலியவன் , ஜருகண்டி , எனக்கு வாய்த்த அடிமைகள் , நீயா என்று தேவையில்லாத படங்களை நடித்து தன்னுடைய சினிமா வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணி கிட்டாரு.
எதோ நடித்த உடனே மாஸ் ஹீரோ ஆகி விடலாம் என்று நடித்த நடிக்கர்களின் தலையெழுத்து சுத்தமாக மாறியது . விஜய் , அஜித் இருவரும் நடித்த உடனே மாஸ் ஹீரோ_வாக வர வில்லை . அதற்க்கு அவர்கள் பல வருடம் காத்திருந்தனர். விஜய் , அஜித் மாதிரி வாரது சாதாரண விஷயம் கிடையாது. இருவரும் பல அவமானங்களை தாண்டி தான் இந்த இடத்துக்கு வந்து இருக்காங்க. எனவே இவர்களும் பொறுமையாக நிதானத்துடன் இருந்தா கண்டிப்பா விஜய் , அஜித் மாதிரி வர முடியும் ஏன் என்றால் இவர்கள் அனைவருமே ஒரு நல்ல நடிகர்கள் மற்றும் நல்ல வெற்றி படங்களை கொடுத்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை ..