ஊழலின் முக்கோணங்களான அமைச்சர், அதிகாரி, ஒப்பந்ததாரர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மநீம அறிக்கை வெளியிட்டுள்ளது..
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கங்களில் செய்தி வெளியானது.. இதனையடுத்து இந்த தகவல் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை உறுதி செய்தனர்.. இது தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அரசியல் தலைவர்கள் பலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. அதில், “புளியந்தோப்பு தரமற்ற கட்டுமான விவகாரத்தில் முன்னாள் முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகள் விசாரிக்கப்படவேண்டும்..
பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். ஊழலுக்கு ஒத்துழைத்த உயர்மட்ட அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். மூவர் கூட்டணியின் முக்கோண ஊழல் முறியடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
அறிக்கை இதோ :
“புளியந்தோப்பு தரமற்ற கட்டுமான விவகாரத்தில் முன்னாள் முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகள் விசாரிக்கப்படவேண்டும்..!!” – மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் திரு. @sentharu அவர்களின் அறிக்கை.#MakkalNeedhiMaiam pic.twitter.com/EOQr4Rz9xq
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 20, 2021