Categories
மாநில செய்திகள்

BREAKING : தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை… மேலும் 6 மாதம் நீட்டிப்பு…!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.. இந்த ஆணையத்தின் கால அவகாசம் வருகின்ற 22ம் தேதியுடன் முடியும் நிலையில் மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 22ஆம் தேதி வரை அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு அவகாசம் அளித்துள்ளது  தமிழக அரசு

முன்னதாக அருணா ஜெகதீசன் ஆணையம் இடைக்கால விசாரணை அறிக்கையை கடந்த மே 14 ஆம் தேதி மு.க ஸ்டாலினுக்கு அனுப்பியதை தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதுவே கடைசி கால அவகாசம்.. அதற்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசு அறிவுறுத்தியுள்ளது..

Categories

Tech |