தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் வீட்டுவசதி வாரியத்தில் வீடு, காலி மனைகள், கடை பெற்று விற்பனை பத்திரம் பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.
மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி எஞ்சிய விற்பனை பத்திரங்களை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 24, 25, 26 காலை 10 முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.