சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார் . கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படமும் அசுரன் படத்தை போல ஒரு நாவலை தழுவி எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி வரை வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது .
இந்த தகவல் உண்மையானால் வெற்றிமாறன், சூர்யா இருவரது திரை வாழ்க்கையிலும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாடிவாசல் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஜெயமோகனின் கதையை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.